சட்டம் - ஒழுங்கு தொடர்பாக டிஜிபி, தலைமை செயலாளருடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை

தமிழகத்தின் முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றார்.
சட்டம் - ஒழுங்கு தொடர்பாக டிஜிபி, தலைமை செயலாளருடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை
Published on

சென்னை,

தமிழகத்தின் 13வது முதல்-அமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று காலை பதவியேற்றார். தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதனை தொடர்ந்து தலைமை செயலகம் வந்த முதல்-அமைச்சர் விஜய் முறையாக பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில், முதல்-அமைச்சராக பதவியேற்ற விஜய் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக டிஜிபி, தலைமை செயலாளர், காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவது குறித்து முதல்-அமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com