முன்னணி தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை

புதிய முதலீடுகளை ஈர்ப்பது குறித்து விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.
முன்னணி தொழில் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை
Published on

சென்னை,

தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் அதிரடிப்படை, போதைப்பொருள் ஒழிப்பு, மதுக்கடைகள் மூடல், என அடுத்தடுத்த அதிரடியில் இறங்கியுள்ளார். மேலும் சட்டம்-ஒழுங்கு குறித்தும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் பி.எம்.டபிள்யூ., டி.வி.எஸ்., ஹட்சன் (BMW, TVS, Hudson) உள்ளிட்ட மோட்டார் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், ஏற்கனவே செய்யப்பட்டுள்ள முதலீடுகள் குறித்தும் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com