சட்டசபையில் கோட் சூட்டில் முதல்-அமைச்சர் விஜய்

இன்று சட்டசபையில் உறுப்பினராக பதவியேற்கும் போது, ‘உளமார உறுதி கூறுகிறேன்..’ என முதல்-அமைச்சர் விஜய் கூறினார்.
சட்டசபையில் கோட் சூட்டில் முதல்-அமைச்சர் விஜய்
Published on

சென்னை,

தமிழக முதல்-அமைச்சராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் (51) நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். விஜய்யுடன் 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

முதல்-அமைச்சர் பதவியேற்பு விழாவுக்கு கோட்-சூட்டில் வந்த ஜோசப் விஜய், இன்று சட்டசபையில் முதல் கூட்டத் தொடரின் முதல் நாளிலும் கோட்-சூட் அணிந்து வந்து பங்கேற்றுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் என். ஆனந்த் அமர்ந்துள்ளார். எதிர் திசையில் சட்டப்பேரவை திமுக குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் அமர்ந்துள்ளார்.

பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்ட பிறகு 9 அமைச்சர்களும், அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து உறுப்பினர்களும் பதவியேற்றனர்.

முதல்-அமைச்சராக நேற்று பதவியேற்கும் போது, ‘ஆண்டவன் மீது ஆணையாக..’ என பதவியேற்றுக் கொண்ட விஜய், இன்று அவையில் உறுப்பினராக பதவியேற்கும் போது, ‘உளமார உறுதி கூறுகிறேன்..’ எனக்கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com