கரூரில் முதல்-அமைச்சர் விஜய்: வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு

காரில் மலர் தூவி முதல்-அமைச்சர் விஜய்க்கு மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
கரூரில் முதல்-அமைச்சர் விஜய்: வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு
Published on

கரூர்,

முதல்-அமைச்சர் விஜய்யின் வருகையையொட்டி, கரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

கரூரில் விஜய்

கரூரில் தவெக சார்பில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று காலை 9 மணிக்கு நீலாங்கரை இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டார். காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த அவர், காலை 9.30 மணிக்கு சிறப்பு விமானத்தில் திருச்சி புறப்பட்டு சென்றார். காலை 10.20 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைந்த முதல்-அமைச்சர் விஜய், அங்கிருந்து கரூருக்கு காரில் புறப்பட்டு சென்றுகொண்டிருக்கிறார்.

மலர் தூவி வரவேற்பு

இந்த நிலையில், காரில் முதல்-அமைச்சர் செல்லும் வழியெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இளைஞர்கள், பெண்கள், என பலர் முதல்-அமைச்சர் விஜய்யின் காரில் மலர் தூவி அவர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். முதல்-அமைச்சர் விஜய்யின் வருகையையொட்டி, கரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. சுமார் 6,500 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com