சென்னை மாநகராட்சியில் 12 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் விஜய்

சென்னை விமான நிலைய நுழைவுவாயில் பகுதியில் பசுமை வழித்தடம் அமைப்பதற்கான 2 புதிய திட்டப் பணிகளுக்கும் விஜய் அடிக்கல் நாட்டினார்.
சென்னை மாநகராட்சியில் 12 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் விஜய்
Published on: 

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிருவாக இயக்குநரகம், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஆகியவற்றின் சார்பில் மொத்தம் ரூ.174.97 கோடி செலவில் முடிவுற்ற 12 திட்டப் பணிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று திறந்து வைத்தார். மேலும், ரூ.11.15 கோடி மதிப்பீட்டில் சென்னை விமான நிலைய நுழைவுவாயில் பகுதியில் பசுமை வழித்தடம் அமைப்பதற்கான 2 புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் அவர்கள், இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 97 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவிலும், நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் சார்பில் 73 கோடியே 64 இலட்சம் ரூபாய் செலவிலும், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் அமேசான் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் கோடி ரூபாய் செலவிலும் என மொத்தம் 174 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 12 திட்டப் பணிகளைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்து, 11 கோடியே 4 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னையின் நுழைவுவாயிலான சென்னை விமான நிலையப் பகுதியில் உள்ள பூங்கா மற்றும் கிண்டி கத்திப்பாரா முதல் சென்னை விமான நிலைய நுழைவுவாயில் பகுதி வரையிலான 5.30 கி.மீ. நீளத்திற்குப் பசுமை வழித்தடம் அமைப்பதற்கான 2 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தல்

58 மணலி மண்டலத்தில் கோடியே 33 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ள கடப்பாக்கம் ஏரி: திரு.வி.க. மண்டலம், புளியந்தோப்பு, தட்டான்குளம் பகுதியில் 35 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கழிவுமாற்று நிலையம் (Waste Transfer Station); மணலி மண்டலம், மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பகுதியில் 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைக்கப்பட்ட நீர் உறிஞ்சும் பூங்கா:

என மொத்தம் 97 கோடியே 33 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 3 திட்டப் பணிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்

சென்னையின் நுழைவுவாயிலான சென்னை விமான நிலையப் பகுதியில் உள்ள பூங்கா மற்றும் கிண்டி கத்திப்பாரா முதல் சென்னை விமான நிலைய நுழைவுவாயில் பகுதி வரை 11 கோடியே 15 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5.30 கிலோ மீட்டர் நீளத்திற்கு பசுமை வழித்தடம் அமைப்பதற்கான 2 புதிய திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.

நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தல்

மதுரை மாநகராட்சியில் மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தைப் பகுதியில் 10 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வெங்காயச் சந்தை;

விருத்தாசலம் நகராட்சியில் 5 கோடியே 41 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நவீன காய்கறிச் சந்தை; திட்டக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் 5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவமனைக் கட்டடம்; ராணிப்பேட்டை நகராட்சியில் 10 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம்; ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் 16 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம்; கொமாரபாளையம் நகராட்சியில் 7 கோடியே 38 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம்; பொள்ளாச்சி நகராட்சியில் 5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு அரங்கம்; வெள்ளக்கோவில் நகராட்சியில் 13 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் குடிநீர்த் திட்ட மேம்பாட்டுப் பணிகள்;

என மொத்தம் 73 கோடியே 64 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 8 திட்டப் பணிகளை தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் அமேசான் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தைத் திறந்து வைத்தல்

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் அமேசான் (Amazon) நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ், 4 கோடி ரூபாய் செலவில் கோட்டூர்புரத்தில் நாளொன்றுக்கு 10 இலட்சம் லிட்டர் (1 MLD) கழிவுநீரைச் சுத்திகரித்து, மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை வழங்கிய 6,000 சதுர அடி நிலப்பரப்பில், பக்கிங்ஹாம் கால்வாய் அடையாறு ஆற்றில் கலக்கும் முகத்துவாரப் பகுதியில் Hybrid Anaerobic Reactor, Moving Bed Bio Reactor (MBBR), Multi-grade Filter Ultra Filtration உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் இந்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சுத்திகரிக்கப்படும் நீர், நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்துவதற்கும், அருகிலுள்ள பூங்காக்கள், சாலையோரச் செடிகள் மற்றும் மரங்களின் பராமரிப்பிற்கும் பயன்படுக்கப்படும்.

அமேசான் நிறுவனம், தனது நீர்மேம்பாட்டுச் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக இத்திட்டத்தைச் இத்திட்டத்திற்கான 100 சதவீத மூலதனச் செலவையும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான இத்திட்டச் செயல்பாடு செயல்படுத்தியுள்ளது. மற்றும் பராமரிப்புச் செலவுகள் முழுவதையும் இந்நிறுவனமே ஏற்றுக்கொண்டுள்ளது. அமெரிக்காவிற்கு வெளியே முதன்முறையாக இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் இத்தகைய முன்னோடி சுத்திகரிப்பு நிலையத்தை இந்நிறுவனம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசுக்கும். இந்நிறுவனத்திற்கும் இடையிலான ஒருங்கிணைப்பு, எதிர்காலத்தில் மேலும் பல நீர்மேம்பாட்டுத் திட்டங்களுக்கு வழிவகுக்கும்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு "சிறந்த மோட்டார் அல்லாத போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம்" விருது

பாதசாரிகளுக்கான பிரத்யேக நடைபாதை மற்றும் சாலைப் பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளுடன் தேனாம்பேட்டை மண்டலம், காதர் நவாஸ்கான் சாலையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்காக ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் "சிறந்த மோட்டார் அல்லாத போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம்" என்ற பிரிவின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட விருதினை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.

தேனி-அல்லிநகரம் நகராட்சிக்கு “தூய்மை நகரம்” விருது

புதுடெல்லியில் நடைபெற்ற ஸ்வச் சர்வேக்ஷன் 2025–26 (Swachh Survekshan) விருது வழங்கும் விழாவில், ஒன்றிய அரசின் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், தமிழ்நாட்டின் முதல் தூய்மை நகரமாகத் தேர்வுசெய்யப்பட்ட தேனி-அல்லிநகரம் நகராட்சிக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் வழங்கிய விருதினை, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் நகராட்சி நிருவாக இயக்குநர் மற்றும் தேனி-அல்லிநகரம் நகராட்சி ஆணையர் ஆகியோர் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X