இந்தியாவிலேயே அதிக மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர் முதல்-அமைச்சர் விஜய் - அமைச்சர் அருண்ராஜ்

மதுராந்தகம் திமுகவுக்கு, தாராபுரம் அதிமுகவுக்கு என்று டீலிங் பேசப்பட்டிருக்கிறது என அமைச்சர் அருண்ராஜ் பேசியுள்ளார்.
அமைச்சர் அருண்ராஜ்
Published on: 

திருப்பூர்,

திமுகவுடன் கூட்டணி பேசவில்லை என எடப்பாடி பழனிசாமியால் சத்தியம் செய்ய முடியுமா? எனவும் அமைச்சர் அருண்ராஜ் கேள்வி எழுப்பினார்.

அதிக மக்கள் செல்வாக்கு பெற்றவர்

இது தொடர்பாக, தாராபுரம் கூட்டத்தில் அமைச்சர் அருணராஜ் பேசியதாவது;-

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே மக்கள் செல்வாக்கும் அதிகம் பெற்ற தலைவர் தளபதி. எதிர்க்கட்சிக்காரரர்கள் இந்த மண்ணில் மீண்டும் தமிழக மக்களை ஏமாற்றி அரசியல் செய்ய முடியுமா? துபாய்க்கு போய் தொழில் செய்யலாமா?. இரண்டு பேரும் சேர்ந்து கூட்டணி அமைச்சா, ஏதாவது வாய்ப்பு இருக்குமா? என்று கிளி ஜோசியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கிளி ஜோசியம் பார்த்தாலும் சரி, குருவி சகுனம் பார்த்தாலும் சரி, தவெக இருக்கும் வரை எதிர்க்கட்சி வரிசையில்தான் இருக்க போறீங்க.

2026 பொதுத்தேர்தல் முடிவு விபத்து அல்ல. தமிழக மக்கள் அரசியலை எப்படி புரிந்து வைத்துள்ளர் என்பதின் வெளிப்பாடு. தமிழக மக்கள் பகுத்தறிவோடு சிந்தித்து வாக்களித்திருங்காங்க. அதற்கான சாட்சிதான் 2026 பொதுத்தேர்தல். கொங்கு மண்டலத்தில் 60 இடங்களில் 28 இடங்களை வெற்றி பெற வைத்து தவெக-வின் கோட்டை என நிரூபித்துள்ளீர்கள். இந்த கொங்கு மக்களுக்கு என்னுடைய சல்யூட்.

கொங்கு மக்கள் என்றால் நியாபகத்திற்கு வருவது உண்மை, கடின உழைப்பு, சுயமரியாதை. தற்போது வேதனையான விஷயம் என்றவென்றால் தானும் கொங்கு மண்டலக்காரன் என்று சொல்லிக்கிட்டு, கொங்கு மண்டல பிரதிநிதி என்று சொல்லிக்கிட்டு தலைமை பண்பே இல்லாத ஒரு தலைவர். அவர் யார் என்று உங்களுக்கு தெரியும். கொங்கு மண்டல மக்களின் அடிப்படை பண்புகளுக்கு எதிராக, உண்மைக்கு புறம்பாக குறுக்கு வழியில, பதவி மட்டுமே முக்கியம் என்பதற்காக செய்யக்கூடாத வேலையெல்லாம் செய்து கொண்டிருக்காரு.

திமுக-அதிமுக கூட்டணி

திமுக கூட கூட்டணி வைக்க முயற்சி செய்யலையா? என கொங்கு மக்கள் அவரிடம் சத்தியம் செய்ய கேட்க வேண்டும். கொங்கு மக்கள் என்ன ஆனால் எனக்கென்ன? என்று பொய் சத்தியம் கூட செய்வாரு. அதுதான் ஈபிஎஸ். அவரை ஈபிஎஸ் என்பதை விட கேகேஎஸ் என்றுதான் சொல்ல வேண்டும். கூவத்தூர் குறுக்குவழி சாமிதான் அவர்.

கூவத்தூர் குறுக்குவழி சாமியிடம் கேட்கும் ஒரு கேள்வி, ஓ.பி.எஸ்.-ஐ ஏன் கட்சியை விட்டு நீக்கினிங்க. திமுக உடன் உறவை வைச்சிருக்கார் என்பதனால்தானே. அதே காரணத்திற்கான அதிமுக-வின் உண்மையான தொண்டர்களாக உங்களுடைய அடிப்படை உறுப்பினர் பதவியை இழக்கதான் போறீங்க. இது கண்டிப்பா நடக்கதான் போகிறது.

இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளனர் என்றால் ஏன் என்று சிந்தித்து பாருங்கள். அவர்களுக்கு ஆட்சியை இழந்தது பெரிது அல்ல. திரும்பவும் ஆட்சிக்கே வர முடியாது என்ற பதட்டம்தான் மறைமுக கூட்டணியில் ஈடுபட வைச்சிருக்கு.

இடைத்தேர்தலில் திமுக-அதிமுக கூட்டணி என்பதை ஆதாரப்பூர்வமாக கூறுகிறேன். மதுராந்தகம் திமுகவுக்கு, தாராபுரம் அதிமுகவுக்கு என்று டீலிங் பேசப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com