சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் டான்ஸ் மட்டும்தான் ஆடவில்லை: உதயநிதி விமர்சனம்

தூய சக்தி என்று சொன்னவர்கள் குதிரை பேரம் நடத்துவதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் டான்ஸ் மட்டும்தான் ஆடவில்லை: உதயநிதி விமர்சனம்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் தஞ்சை மத்திய மாவட்ட அயலக அணி தலைவர் க.முத்து தமிழ்ச்செல்வன் இல்ல திருமண விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

சட்டமன்றத்தை சினிமா ஷூட்டிங்போல ஆளுங்கட்சி மாற்றியிருக்கிறது. சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் டான்ஸ் மட்டும்தான் ஆடவில்லை. அடுத்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் டான்ஸ் ஆடுவார் என நினைக்கிறேன். தமிழக சட்டமன்றத்தின் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது.

தமிழ்நாடு முழுவதும் தற்போது மின்சாரம், சட்டம்-ஒழுங்கு எங்கே என மக்கள் தேடி வருகின்றனர். சட்டம் ஒழுங்கு உட்பட சட்டமன்றத்தில் நாம் கேட்ட கேள்விக்கு முதல்-அமைச்சர் எந்த பதிலும் சொல்லவில்லை. இந்த பேரிடரில் இருந்து தமிழ்நாட்டை காக்க வேண்டியது நமது பொறுப்பு.

சோபா மாடல் ஆட்சியின் போலி பிம்பம் அடித்து துவைக்கப்பட்டு நொறுங்கி கிடக்கிறது. இந்த ஆட்சியின் அவலத்தை ஒவ்வொரு நாளும் மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். இந்த ஆட்சியின் கொடுமைகளை இளைஞர்கள் தட்டிக் கேட்டு வருகின்றனர். அப்படி தட்டிக் கேட்கும் இளைஞர்களை சோபா மாடல் அரசு கைது செய்கிறது. இது போன்ற அடக்குமுறைகளை எதிர் கொள்ள கழகத்திற்கு வழக்கறிஞர்கள் தேவை.

நம்மை கிண்டல் செய்வதாக நினைத்து முதல்-அமைச்சவர் அவரை அவரே எக்ஸ்போஸ் செய்து கொள்கிறார். தூய சக்தி என்று சொன்னவர்கள் ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே குதிரை பேரத்தை தொடங்கினர். திமுக தூண்டுதலால் விவசாயிகள் போராடுவதாக அவர்களை முதல்-அமைச்சர் கொச்சைப்படுத்தினார்; எதற்கெடுத்தாலும் திமுகதான் காரணம் என்ற ரெடிமேட் பதிலை முதல்வர் வைத்திருக்கிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com