

சென்னை,
தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்திப்பதற்காக இன்று விஜயவாடா செல்கிறார். இதற்காக மதியம் 2.30 மணிக்கு சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்ட முதல்-அமைச்சர் விஜய், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் ஆந்திரா புறப்படார்.
மாலை 4 மணிக்கு விஜயவாடா விமான நிலையம் வந்தடைகிறார். தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. இதற்காக மட்டும் 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும் தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், அங்கிருந்து 30.5 கி.மீ. தொலைவில் உள்ள கனக துர்கா கோவிலுக்கு காரில் செல்கிறார்.
மாலை 4.55 மணிக்கு கோவிலுக்கு செல்லும் அவர், மாலை 5 மணி முதல் 5.45 மணி வரை நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு அம்மனை தரிசிக்கிறார். பின்னர், அங்கிருந்து மாலை 5.45 மணிக்கு காரில் புறப்படும் அவர் மாலை 6 மணிக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இல்லத்தை அடைகிறார். ஒரு மணி நேரம் அங்கிருக்கும் முதல்-அமைச்சர் விஜய், கோதாவரி - காவிரி ஆறு இணைப்புத் திட்டம் மற்றும் கிருஷ்ணா நீரை திறந்துவிடுவது குறித்து அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுடன் பேசுகிறார்.
இரவு 7.10 மணிக்கு சந்திரபாபு நாயுடு இல்லத்தில் இருந்து புறப்படும் முதல்-அமைச்சர் விஜய், உத்சவ் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.