தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் முதல்-அமைச்சர் விஜய்

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கிறார்.
டெல்லி புறப்பட்டார் முதல்-அமைச்சர் விஜய்
Published on: 

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார் முதல்-அமைச்சர் விஜய்.

முதல்-அமைச்சர்விஜய் டெல்லி செல்வதற்காக, இன்று பிற்பகல் சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்து விமான நிலையம் வந்தடைந்தார், அங்கிருந்து அவர் தனி விமானம் மூலமாக டெல்லி புறப்பட்டு சென்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் தன் வரலாற்று நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சர் விஜய் டெல்லி செல்கிறார்.

காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள், காங்கிரஸ் ஆளும் ஹிமாசல பிரதேம் கேரளம், தெலங்கானா, கர்நாடகம் ஆகிய மாநில முதல்-மந்திரிகளும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.

ஏற்கெனவே அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா டெல்லியில் இருக்கக்கூடிய நிலையில் அமைச்சர் என். ஆனந்தும் செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.

விழாவில் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமாரும் கலந்துகொள்ளவிருப்பதால் மேகதாது அணை விவகாரம் குறித்து இருவரும் பேச வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

X