மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்த முதல்-அமைச்சர் விஜய்

தமிழக முதல்-அமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்த முதல்-அமைச்சர் விஜய்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்-அமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதையடுத்து, தமிழக சட்டசபை இன்று கூடியது. சட்டசபை கூட்டம் நிறைவடைந்த உடன் முதல்-அமைச்சர் விஜய் ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்று அவரை சந்தித்தார்.

மு.க.ஸ்டாலினை சந்தித்தப்பின் முதல்-அமைச்சர் விஜய் அண்ணா நகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீட்டிற்கு நேரில் சென்றார். வைகோவை சந்தித்த முதல்-அமைச்சர் விஜய் அவரிடம் வாழ்த்து பெற்றார். முன்பாக, முதல்-அமைச்சர் விஜய்யை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வீட்டின் வாசலுக்கே வந்து ஆரத்தழுவி வரவேற்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com