

சென்னை,
முதல்-அமைச்சர் விஜய்யின் இல்லம் நீலாங்கரையில் உள்ளது. தலைமைச்செயலகத்தில் இருந்து வெகுதொலைவில் இருப்பதால் அங்கு முகாம் அலுவலகம் அமைத்து அவசர ஆலோசனைகள், அதிகாரிகளுடனான சந்திப்புகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது நடைமுறையில் சிரமமாக இருக் கும்.
இதையடுத்து முதல்-அமைச்சரின் பயண நேரத்தை குறைக்கவும், அவசர ஆலோசனைகள் மற்றும் அதிகாரிகளுடனான சந்திப்புகளை தலைமைச் செயலகத்துக்கு அருகிலேயே நடத்துவதற்கும் வசதியாக, சென்னை டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் உள்ள பொதிகை வளாகத்தில் அமைந்துள்ள பாமணி இல்லம் முகாம் அலுவலகமாக புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த அலுவலகத்தில் முதல்-அமைச்சருக்கென தனி அலுவலக அறை, தனிச்செயலாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கான தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காகக் கூட்ட அரங்கமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன் புதுப்பிப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், பாமணி இல்லத்தில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் முதல்-அமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, முதல்-அமைச்சரின் முகாம் அலுவலகமாக பாமணி இல்லம் பயன்பாட்டுக்கு வர உள்ளது.