

சென்னை,
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டத்தில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்றார்.
போதைப்பொருளுக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ’ஸ்டார்ட் ரன்... ஸ்டாப் டிரக்ஸ்’ என்ற பெயரில் இன்று விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. சென்னை காமராஜர் சாலையில் இந்த விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு ஓட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்து ஓட்டத்தில் பங்கேற்றார். அவருடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், மரிய வில்சன், வெங்கட்ராமன் தலைமைச்செயலாளர் உள்பட பலர் பங்கேற்றனர்.
முதல்-அமைச்சர் விஜய் விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்ற விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள், பொதுமக்களுடன் இணைந்து ஒடினார்.