அயோத்திதாச பண்டிதர் சிலைக்கு முதல்-அமைச்சர் விஜய் மரியாதை

அயோத்திதாச பண்டிதரின் சிலைக்கு முதல்-அமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினார்.
அயோத்திதாச பண்டிதர் சிலைக்கு முதல்-அமைச்சர் விஜய் மரியாதை
Published on

சென்னை,

தமிழகத்தில் வேத பிராமணிய எதிர்ப்பு, தீண்டாமை, சாதி ஒழிப்பு, வகுப்புவாரி பிரதிநித்துவம், பெண்ணுரிமை, தமிழ்மொழி உணர்வு, சுயமரியாதை, பகுத்தறிவு போன்ற கருத்துகளை சிந்தித்த மாபெரும் அரசியல் ஞானி அயோத்திதாச பண்டிதர்.

100 ஆண்டுகளுக்கு முன் `தமிழன்' என்ற வார இதழை 7 ஆண்டுகள் நடத்திய பத்திரிகையாளர், எழுத்தாளர், சமூக சீர்திருத்த சிந்தனையாளர், சித்த மருத்துவர், தமிழறிஞர், பௌத்த பேரறிஞர் அயோத்திதாசப் பண்டிதரின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அயோத்திதாச பண்டிதரின் 181-வது பிறந்தநாளையொட்டி கிண்டியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு முதல்-அமைச்சர் விஜய் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், வெங்கடராமன், சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றதையடுத்து அவர் பங்கேற்ற முதல் அரசு விழா இது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com