

சென்னை,
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த தமிழக வீரர்களை, சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் நேரில் சந்தித்து பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி மற்றும் பிரவீன் ஆகியோருக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற செல்வபிரபுவுக்கும் முதல்-அமைச்சர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.
அதன்படி, வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டி மற்றும் பிரவீனுக்கு தலா ரூ.30 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்ற செல்வபிரபுவுக்கு ரூ.20 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த வீரர்களின் சாதனையை பாராட்டிய முதல்-அமைச்சர் விஜய், எதிர்காலத்திலும் இதேபோன்ற சாதனைகளை தொடர வாழ்த்துகளை தெரிவித்தார்.