முதல்-அமைச்சர் விஜய்க்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் - பிரேமலதா பேட்டி

மக்கள் பிரச்சினைகளையும், தமிழகத்தின் உரிமைகளையும் சட்டசபையில் பேசுவோம் என பிரேமலதா கூறினார்.
முதல்-அமைச்சர் விஜய்க்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் - பிரேமலதா பேட்டி
Published on

சென்னை,

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் இன்று சட்டசபைக்கு வருகை தந்து எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது முதல்-அமைச்சர் விஜய்க்கும், எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு வணக்கம் செலுத்தினார்.

இந்த நிலையில், சட்டசபை வளாகத்தில் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

”இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளேன். என்னை வெற்றிபெற வைத்த விருத்தாச்சலம் தொகுதி மக்களுக்கும், கூட்டணி கட்சிதலைவர் ஸ்டாலினுக்கும், அனைவருக்கும் நன்றிகள். இந்த வெற்றியை கேப்டன் விஜயகாந்துக்கு உரித்தாக்குகிறேன். விருத்தாச்சலம் தொகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குகளை நிறைவேற்றுவேன்.

முதல்-அமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். விஜய்க்கு கட்டாயம் நேரம் கொடுக்க வேண்டும். அவருக்கு உரிய அவகாசம் கொடுப்போம். அதன் பிறகு மக்கள் பிரச்சினைகளையும், தமிழகத்தின் உரிமைகளையும் சட்டசபையில் பேசுவோம். ”

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com