

சென்னை,
தவெக தலைவரும் முதல்-அமைச்சருமான விஜய் வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து செப். 30ம் தேதி தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) ஆகிய 2 தனித் தொகுதிகளுக்கும் வருகிற அக். 6 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, அக். 9 ஆம் தேதியில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த செப். 9 ஆம் தேதியில் தொடங்கி செப். 16 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த இடைத்தேர்தலில் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், நா.த.க. என ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது.
இதையொட்டி, அரசியல் கட்சிக ளின் தலைவர்கள், வேட்பா ளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்த வகையில், மதுராத் தகம் (தனி) தொகுதியில் போட்டியிடும்தவெகவேட்பாளர் மரகதம் குமரவேளை ஆதரித்து அக்கட்சியின் முதல்-அமைச்சருமான விஜய், மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூரில் செப்.2-பிரசாரம் மேற் கொண்டார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் அக்.8-ம் தேதி நடக்கிறது. திமுக, அதிமுக, தவெக, நாதக, இந்திய கம்யூனிஸ்ட் உள்பட 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
பிரதான கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்யும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமார்ன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், தவெக தலைவரும் முதல்-அமைச்சருமான விஜய் வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து செப். 30ம் தேதி தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மேலும் வாக்குசேகரிப்பு இறுதி நாளான அக்.4 ம்தேதி ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க உள்ளதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையொட்டி பத்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்காக தாராபுரம் உடுமலை சாலையில் சுமார் 34 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்குமார் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முகாமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.