

சென்னை,
த.வெ.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்க ளுடன் முதல்-அமைச்சர் விஜய் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவோடு நடந்து வருகிறது. த.வெ.க. அமைச்சரவையில் இடம் பெறாத 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் ஆட்சியின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.
இதனால் த.வெ.க.வுக்கான ஆதரவை கம்யூனிஸ்டு கட்சிகள் எப்போது வேண்டுமென்றாலும் வாபஸ் பெற லாம் என்ற தகவலும் அரசியல் வட்டாரத்தில் இருந்து வருகிறது. இந்த விவகாரம் த.வெ.க. ஆட்சிக்கு சிக்கலாக ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் முயற்சிகளும் திரைமறைவில் அரங்கேறி உள்ளன. இதுபற்றி த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் இளையராஜா (ஊத்தங்கரை), முஸ்தபா (மதுரை மத்தி) ஆகியோர் வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். தற்போது இந்த விவகாரம் போலீஸ் விசாரணையில் இருந்து வருகிறது.
சமீபத்தில் சென்னையில் நடந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்ல திருமண விழாவில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், 'விரைவில் தி.மு.க. ஆட்சி உதயமாக போகிறது. நல்ல சூழல் அமைய இருக்கிறது.' என்று கூறினார். அவரது இந்த பேச்சை
சுட்டிக்காட்டி, 'திரைமறைவில் நடைபெறும் குதிரை பேர முயற்சிகளின் ஒப்புதல் வாக்குமூலம் போல உள்ளது. இதுகுறித்துமு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்' என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'த.வெ.க.வில் 60 முதல் 70 எம்.எல்.ஏ.-க்கள் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் ஒன்றாக இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது' என்று பரபரப்பு கருத்தை தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பான அரசியல் சூழலில், த.வெ.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மன்னார் குடி தொகுதி எம்.எல்.ஏ. காமராஜ் ஆகியோருடன் முதல்-அமைச்சர் விஜய் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்த இருக்கிறார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முதல்-அமைச்சரின் அரசு இல்லமான பாமணி இல்லத்தில் இன்று மதியம் 3 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்கும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களி டம், அரசியல் ரீதியாகவும் மற்றும் ஜனவரி மாதம் நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனைகளை வழங்குவார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
த.வெ.க.வை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள், துணை சபாநாயகர் மீது சர்ச்சைகள், புகார்கள் எழுந்திருந்த நிலையில் முதல்-அமைச்சர் விஜய், மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் சொகுசு விடுதியில் கடந்த 11-ந்தேதி ஆலோசனை கூட் டம் நடத்தி இருந்தார். தற்போது அவர், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களிடமும் ஆலோசனை கூட்டத்தை கூட்டி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கும் வழிவகுத்துள்ளது.