ஆந்திரா செல்லும் முதல் அமைச்சர் விஜய்? சந்திரபாபு நாயுடுவை சந்திக்க திட்டம்

விஜயவாடாவில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரை விஜய் சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்திரபாபு நாயுடு- விஜய்
கோப்பு படம்
Published on: 

முசென்னையின் குடிநீர் தேவைக்காக, தெலுங்கு கங்கை திட்டத்தின் கீழ் ஆந்திர அரசு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீரை மாநில எல்லையில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும். இருப்பினும், இந்த ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி வரை தமிழகத்திற்கு 2.251 டி.எம்.சி. அடி நீர் மட்டுமே கிடைத்தது. இது மட்டுமின்றி, ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்குள் வரும் ஆறுகளில் அணை கட்டவும் அந்த மாநில அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதனால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிய நீர் கிடைப்பதில் சிக்கல் எழக்கூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இவ்விவகாரங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தவும், நதிநீர் இணைப்பு குறித்து ஆலோசனை நடத்தவும் தமிழக முதல் அமைச்சர் விஜய், வரும் 13-ம் தேதி விஜயவாடா செல்கிறார். விஜயவாடாவில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரை விஜய் சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் த்ற்போது வரை வெளியாகவில்லை.

முன்னதாக, காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக முதல் அமைச்சர் விஜய் கடந்த ஆகஸ்ட் மாதம் கர்நாடகா செல்ல திட்டமிட்டு இருந்தார். காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் தீவிர போராட்டம் நடத்தி வந்ததால், தற்போதைக்கு கர்நாடகாவுக்கு வரவேண்டாம் என்று அம்மாநில முதல் மந்திரி டிகே சிவக்குமார், விஜய்க்கு கோரிக்கை வைத்தார். இதையடுத்து முதல் அமைச்சர் விஜய்யின் கர்நாடக பயண திட்டம் ரத்தானது.

X

Daily Thanthi
www.dailythanthi.com