

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்-அமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் விரைவில் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித் ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியும் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.