முதல்-அமைச்சர் விஜய் நாளை புதுக்கோட்டை வருகை - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

இடைத்தேர்தலை எதிர்நோக்கும் தொகுதிகள் அடங்கியுள்ள 3 மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் விஜய் அடுத்தடுத்து செல்ல இருக்கிறார்.
முதல்-அமைச்சர் விஜய் நாளை புதுக்கோட்டை வருகை - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
Published on: 

புதுக்கோட்டை,

முதல்-அமைச்சர் விஜய் நாளை (02.11.2026) புதுக்கோட்டை வருகை தருவதை முன்னிட்டு 4,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

7 தொகுதிகள் காலி

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சி அமைத்தது. ஆனால் ஆட்சிக்கு போதிய எம்.எல்.ஏ.க்கள் இல்லாத நிலையில், அ.தி.மு.க. கட்சியில் இருந்து வெற்றி பெற்ற 25 எம்.எல்.ஏ.க்கள், அக்கட்சி தலைமையின் உத்தரவையும் மீறி, த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு அளித்தனர்.

இதனால் அ.தி.மு.க. கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது. அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் சிலர் ராஜினாமா செய்து த.வெ.க. கட்சியில் இணைந்தனர். இதனால் 7 தொகுதிகள் காலியாகின. அதில் 2 தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அடுத்த இடைத்தேர்தல்

அ.தி.மு.க.வில் இருந்து ராஜினாமா செய்த மரகதம் குமர வேலுக்கு மீண்டும் வாய்ப்பளித்து அதே மதுராந்தகம் தொகுதியிலும், சத்தியபாமாவுக்கு மீண்டும் தாராபுரம் தொகுதியிலும் போட்டியிட த.வெ.க. வாய்ப்பளித்தது. முதல்-அமைச்சர் விஜய் 2 முறை அந்த தொகுதிகளுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டாலும், இடைத்தேர்தலில் மிகப்பெரிய வித்தியாசத்தில் த.வெ.க. வெற்றி பெறவில்லை.

இந்த நிலையில் அடுத்ததாக காலியாக உள்ள புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, கரூர், நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, முதல்-அமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் வாய்ப்பு

இதுபற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அக்கட்சி கூட்டத்தில் பேசியிருக்கிறார். எனவே அடுத்த இடைத்தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திருச்சி கிழக்கு தொகுதி தவிர மற்ற தொகுதிகளுக்கு, அ.தி.மு.க.வில் இருந்து த.வெ.க.விற்கு சென்ற சி.விஜயபாஸ்கர் (விராலி மலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), அம்பாசமுத்திரம் (இசக்கி சுப்பையா), ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகிய 4 பேருக்கும் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட உள்ளது.

கடந்த 2 இடைத்தேர்தல்களில் அமோக வெற்றி என்ற நிலையை த.வெ.க.வினால் எட்ட முடியவில்லை என்பதால், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உற்சாகத்துடன் களம் இறங்க உள்ளன. இது த.வெ.க.விற்கு கடும் நெருக்கடியை உருவாக்கும். ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, மின்சார துண்டிப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் நிலை ஆகியவை பற்றி த.வெ.க. அரசு மீது எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன.

நாளை, நாளை மறுநாள்

எனவே முதல்-அமைச்சர் விஜய், அந்த தொகுதிகள் அடங்கியுள்ள மாவட்டங்களுக்கு 2-க்கும் மேற்பட்ட முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என்ற வகையிலும், அரசியல் ரீதியாகவும் அந்த தொகுதிகள் மற்றும் அவை அடங்கியுள்ள மாவட்டங்களுக்கு செல்ல திட்டமிட் டுள்ளார்.

அந்த வகையில், 2-ந் தேதி (நாளை) புதுக்கோட்டையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளிலும், வரும் 3-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதோடு, வரும் 14-ந் தேதி நெல்லை மாவட்டம் அம்பாச முத்திரம் அரசுப்பள்ளியில் நடைபெற உள்ள குழந்தை கள் தின விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. குழந்தைகளுக்கு அவர் கேக் வழங்குகி றார். அம்பாசமுத்திரம் செல்லும் வழியில் முதல்-அமைச் சர் விஜய், ரோடு ஷோ நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

பாதுகாப்பு பணி

இந்நிலையில் நாளை புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம், உள்விளையாட்டு அரங்கத்தை முதல்-அமைச்சர் விஜய் திறக்கவுள்ளார். தொடர்ந்து அரசு விழாவில் பங்கேற்கும் அவர் ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முன்னதாக புதுக்கோட்டை நகரில் ரோடு ஷோ நடத்தி புதிய பேருந்து நிலையம் செல்கிறார் முதல்-அமைச்சர் விஜய். முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு நாளை புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் நாளை புதுக்கோட்டை வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 4,000 போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

X