

சென்னை,
சென்னை வண்டலூர் அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் போலீஸ் பயிற்சி அகடாமி உள்ளது. இங்கு சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட போலீஸ் டி.எஸ்.பி.க்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.
14-வது பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்களின் (டிஎஸ்பி) பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா ஊனமாஞ்சேரியில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த விழாவில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்று பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு மரியாதையை ஏற்று, கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இதில் அமைச்சர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அரசு உயர் அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.