சட்டசபையில் சவுமியா அன்புமணியின் பேச்சை குறித்துக்கொண்ட முதல்-அமைச்சர் விஜய்

முதல்-அமைச்சர் விஜய் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சவுமியா அன்புமணி கூறினார்.
சட்டசபையில் சவுமியா அன்புமணியின் பேச்சை குறித்துக்கொண்ட முதல்-அமைச்சர் விஜய்
Published on

சென்னை,

தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீது சட்டசபையில் பாமக எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி பேசியதாவது:-

பெண்கள் பாதுகாப்பிற்கு தனி டிஜிபியுடன் துறை அமைக்க வேண்டும். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தனியார் வேலைவாய்ப்பில் தமிழருக்கு 80% இடஒதுக்கீடு சட்டம் இயற்ற வேண்டும். விகிதாச்சார அடிப்படையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.

விவசாயத்திற்கு முக்கியத்துவம் தந்து, இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். மருத்துவம் இலவசமாக வழங்க வேண்டும். கனிமவள கொள்ளைகளை தடுக்க வேண்டும். விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உறுதி செய்யவேண்டும்.

போதையில்லா தமிழ்நாடு என்பதே பா.ம.க.வின் நிலைப்பாடு. முழு மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும். மதுவை ஒழிக்க 40 ஆண்டுகளாக பா.ம.க. போராடி வருகிறது. எனது தொகுதியான தருமபுரி மாவட்டத்தில் மதுப்பழக்கமும், விற்பனையும் அதிகம் உள்ளது. ஒரு மதுக்கைடயை மூடினால் அருகில் 4 சந்துக்கடைகளை திறந்துவிடுகிறார்கள், முதல்-அமைச்சர் விழிப்புடன் இருக்க வேண்டும். மதுவை ஒழிக்க தொடர் கண்காணிப்பு தேவை, தொடர் முயற்சி தேவைப்படுகிறது.

எனது பேரக்குழந்தைகள் வளர்ந்து வரும்போது போதை இல்லாத தமிழகமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இது எனது ஆசை மட்டுமல்ல தமிழ்நாட்டு பெண்களின் ஆசை, அதனால் போதை, மதுவை ஒழிக்க சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மது இல்லா தமிழகம் தான் மகளிரின் எதிர்பார்ப்பு என்று கூறினார்.

சவுமியா அன்புமணியில் பேச்சை கூர்ந்து கவனித்து வந்த முதல்-அமைச்சர் விஜய் உடனே அதை ஒரு பேப்பரில் குறித்துக்கொண்டார். பின்னர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் இருந்து பா.ம.க. விலகி இருக்க விரும்புகிறது என்று சவுமியா அன்புமணி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com