

சென்னை,
இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வரும் முதல்-அமைச்சர் விஜய் கோவையில் இருந்து தாராபுரத்துக்கு இன்று ஹெலிகாப்டரில் செல்கிறார்.
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்-அமைச்சர் விஜய் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரோடு ஷோ சென்று வாக்கு சேகரிக்க உள்ளார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு கோவை விமான நிலை யம் வருகிறார்.
அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தாராபுரம் மாருதிநகரில் அமைக்கப்பட்டு உள்ள ஹெலிபேடு தளத் தில் இறங்குகிறார். அவர் சாலை மார்க்கமாக சென்றால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட் டுள்ளதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவர், ரோடுஷோவாக சென்று வாக்கு சேகரிக்கிறார். அங்கு மாலை 4 மணிக்கு பிரசாரத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்ப உள்ளார்.
முதல்-அமைச்சர் விஜய் கடந்த 30-ந் தேதி கோவையில் இருந்து அவினாசி சாலை, கருமத்தம்பட்டி, காரணம்பேட்டை, பல்லடம் வழியாக தாராபுரத்துக்கு காரில் சென்றார். அப் போது வழிநெடுக பொதுமக்கள் நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவர் பொதுக்கூட்ட திடலை அடைய தாமதம் ஏற்பட்டது.
மேலும் அவர் சாலை மார்க்கமாக சென்றதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். அதை தவிர்க்கும் வகையில் முதல்-அமைச்சரின் பயணத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது.