

சென்னை,
முதல்-அமைச்சர் விஜய் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. அந்த பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக இங்கிலாந்து செல்ல விஜய் திட்டமிட்டிருந்தார். வரும் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை முதல்-அமைச்சர் விஜய் இங்கிலாந்து செல்ல திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது.
இங்கிலாந்தில் தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீட்டு வாய்ப்புகளை எடுத்துரைப்பதுடன், புதிய முதலீடுகளை ஈர்க்கும் பணிகளையும் ஒப்பந்தங்களையும் நேரில் கண்காணிக்க முதல்-அமைச்சர் விஜய் திட்டமிட்டிருந்தார்.
இதனிடையே, வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை தலைநகர் டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதில் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் பங்கேற்க உள்ளார். பிரிக்ஸ் மாநாட்டிற்குப்பின் அன்வர் இப்ராஹிம் சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் சென்னை வருவதால் அவரை சந்திப்பதை முதல்-அமைச்சர் விஜய் தவிர்ப்பது சரியாக இருக்காது என கவர்னர் அர்லேகர் தரப்பில் அறுவுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சென்னை வரும் மலேசிய பிரதமர் இப்ராஹிமை சந்திக்கும் வகையில் கவர்னரின் அறுவுத்தலின்பெயரில் முதல்-அமைச்சர் விஜய் இங்கிலாந்து பயணத்தை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலேசிய பிரதமர் இப்ராஹிம் சென்னையில் இருந்து மீண்டும் மலேசியா புறப்பட்டப்பின் முதல்-அமைச்சர் விஜய் இங்கிலாந்து பயணத்தை மேற்கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. முதல்-அமைச்சர் விஜய்-யின் இங்கிலாந்து பயண தேதி விவரம் விரைவில் அறிக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.