முதல்வர் விஜய்யின் கற்பனையில் கூட பிரதமர் ஆகும் எண்ணம் இருக்காது - வைகோ!

ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு இவ்வாறு பேசுவது தவறு
வைகோ பேட்டி
வைகோ - விஜய் - ராகுல் காந்தி
Published on

திருநெல்வேலி

தமிழக முதல்வர் விஜய்யின் கற்பனையில் கூட பிரதமர் ஆகும் இந்த எண்ணம் இருக்காது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

விலகுவோம்

சமீபத்தில் குமரியில் காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதை ஏற்காவிட்டால் தவெக அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என கூறியிருந்தார். அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. கூட்டணியிலும் சலசலப்பை உருவாக்கியிருக்கிறது.

வைகோ-வின் பதில்

இந்நிலையில் இன்று திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த வைகோவிடம் செய்தியாளர் ஒருவர் இதுக்குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு வைகோ கூறியதாவது:-

இதுபோன்ற எண்ணங்கள் கற்பனையில் கூட முதல்வர் விஜய்க்கோ அமைச்சர்களுக்கோ இருக்காது. ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு இவ்வாறு பேசுவது தவறு. அமைச்சர்கள் பேசும்போது இதுகுறித்து நகைச்சுவையாக பேசக்கூடாது. வரப்போகும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான். வேறு யாரும் இருக்கவும் முடியாது. இதுகுறித்து இனிமேல் பேசக்கூடாது என்று முதல் அமைச்சர் வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com