

சென்னை,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் நடிகரான விஜய் இன்று தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் உள்ள ரசிகர்கள் சிறப்பு கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
கோவில்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம், நலத்திட்ட உதவிகள், ரத்ததான முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக நலப் பணிகளை விஜயின் ரசிகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்-க்கு, எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.