

சென்னை,
மதுராந்தகத்தில் பிரசாரத்தின் ஒரு பகுதியாக முதல்-அமைச்சர் ரோடு ஷோ மேற்கொண்டார்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்-அமைச்சர் விஜய் கடந்த 25-ந்தேதி. வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து தாராபுரம் தொகுதியில், வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து அவர் பிரசாரம் செய்தார்.
இந்தநிலையில், 2-வது முறையாக மதுராந்தகம் தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.
மதுராந்தகம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் ஒரு பகுதியாக ரோடு ஷோ மேற்கொண்டார்.
மாமண்டூரில் தொடங்கி 35 கிராமங்களில் தொடர்ந்து சாலை வலம் மேற்கொண்டார். வழியில் சாலையின் இருபுறங்களில் மக்கள் வரிசையில் காத்திருந்து முதல்-அமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆரத்தி எடுத்தும், திருஷ்டி பூசணிக்காய் உடைத்தும் தங்கள் பாசத்தை வெளிப்படுத்தினர்.
வழியில் பூங்கொத்துகள் கொடுத்தும், மலர் தூவியும் மக்கள் உற்சாக வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து சாலையோரக் கடைகளிலும் விவசாயிகளிடமும் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். டிராக்டர் ஓட்டியும் மாற்று திறனாளிகளையும் சந்தித்தும் வாக்கு கேட்டார்.
ரோடு ஷோவின் போது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்துக்குச் சென்று முதல்-அமைச்சர் விஜய் தரிசனம் செய்தார்.
இந்தநிலையில் மாமண்டூரில் பிற்பகல் 2.15 மணிக்குத் தொடங்கி 40 இடங்களில் ரோடு ஷோ மேற்கொண்டார். மாலை 6.40 மணிக்கு முதல்-அமைச்சரின் ரோடு ஷோ நிறைவு பெற்றது. மதுராந்தகம் தொகுதியில் 4 மணி நேரம் வரை ரோடு ஷோ நடைபெற்றது.
மதுராந்தகத்தில் ரோடு ஷோவின்போது, வயதான மூதாட்டி ஒருவர் பார்சல் கொடுக்க முயன்றதை கவனித்த முதல்-அமைச்சர் விஜய், உடனடியாக வாகனத்தை நிறுத்தி அதனை பெற்றுக்கொண்டார்.