திருச்சி பொதுக்கூட்ட திடலில் முதல்-அமைச்சர் விஜய் உரை

திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் வருகை தந்துள்ளார்.
திருச்சி பொதுக்கூட்ட திடலில் முதல்-அமைச்சர் விஜய் உரை
Published on

சென்னை

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றிய நிலையில், அதன் தலைவர் விஜய் கடந்த மாதம் 10-ந்தேதி முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். தேர்தலில் விஜய், தான் போட்டியிட்ட சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, முதல்-அமைச்சர் விஜய் இன்று மாலை தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்தடைந்தார்.

தவெக ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக திருச்சிக்கு வருகை தந்துள்ள முதல்-அமைச்சர் விஜயை விமான நிலையத்தில் மதிமுக எம்.பி. துரை வைகோ, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ரமேஷ் உள்ளிட்டோர் வரவேற்றனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஜோசப் கல்லூரி வரை சுமார் 10 கி.மீ முதல்-அமைச்சர் சாலை வலம் மேற்கொண்டார்.

முதல்-அமைச்சர் விஜய்க்கு தொண்டர்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறும் ஜோசப் கல்லூரி மைதான திடலுக்கு முதல்-அமைச்சர் விஜய் வருகை தந்தார். திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் விஜய் வருகை தந்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் விஜய் உரையாற்ற உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com