முதல்-அமைச்சர் கோப்பை போட்டி: முன்பதிவுக்கான காலஅவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு

விவரங்கள் அறிய 'ஆடுகளம்' என்ற தகவல் தொடாபு மையத்தை தொடாபு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
முதல்-அமைச்சர் கோப்பை போட்டி: முன்பதிவுக்கான காலஅவகாசம் நீட்டிப்பு - தமிழக அரசு
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழக முதல்-அமைச்சர் கோப்பை-2024 விளையாட்டு போட்டிகளுக்கான இணையதள முன்பதிவு கடந்த 4ம் தேதி முதல் https:/sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக நடைபெற்று வருகிறது. முன்பதிவிற்கான கடைசி நாள் 25.8.2024 (இன்று) என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுவரை முன்பதிவில் கிடைக்கப்பெற்ற அமோக வரவேற்பை தொடர்ந்து பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என அனைத்து பிரிவினரின் வேண்டுகோளுக்கு இணங்க மற்றும் அனைத்து தரப்பு மக்கள் பெருந்திரளாக பங்கேற்கும் வகையில் இணையதள முன்பதிவு செய்திட கால அவகாசம்வரும் 2ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்கள் அறிய 'ஆடுகளம்' என்ற தகவல் தொடாபு மையத்தை (95140 00777) அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடாபு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com