முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு திருநெல்வேலி கலெக்டர் பாராட்டு


முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு திருநெல்வேலி கலெக்டர் பாராட்டு
x

மாவட்ட போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு தொகை ரூ.3,000, இரண்டாம் பரிசு ரூ.2,000 மூன்றாம் பரிசு தொகை ரூ.1,000 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவில் நடைபெற்ற முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி அளவில் கையுந்து பந்து, கூடைப்பந்து, வளைகோல் பந்து ஆகிய பிரிவில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பிடித்த அணிகளுக்கு மாவட்ட கலெக்டர் சுகுமார் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

2025-ம் ஆண்டிற்கான மாவட்ட /மண்டல அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி (12-19 வயது வரை), கல்லூரி (15-35 வயது), பொதுமக்கள் (15-35 வயது) அரசு ஊழியர்கள் (வயது வரம்பு இல்லை) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (வயது வரம்பு இல்லை) என வெவ்வேறு பிரிவுகளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் அப்பாவு, மாவட்ட கலெக்டர் சுகுமார் தலைமையில் 26.8.2025 அன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து தடகளம், செஸ், கூடைப்பந்து, கபாடி, கால்பந்து, வாலிபால், சிலம்பம், இறகுபந்து, டேபிள் டென்னிஸ் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

மாவட்ட அளவில் நடைபெற்ற முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி அளவில் கையுந்து பந்து, கூடைப்பந்து, வளைகோல் பந்து ஆகிய பிரிவில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பிடித்த அணிகளுக்கு மாவட்ட கலெக்டர் சுகுமார் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

மாவட்ட போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு தொகை ரூ.3,000, இரண்டாம் பரிசு ரூ.2,000 மூன்றாம் பரிசு தொகை ரூ.1,000 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி, பயிற்றுனர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story