அரசு திட்டங்களின் பெயரில் முதல்வர் பெயர் இடம்பெறக்கூடாது - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


அரசு திட்டங்களின் பெயரில் முதல்வர் பெயர் இடம்பெறக்கூடாது - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 1 Aug 2025 12:53 PM IST (Updated: 1 Aug 2025 2:00 PM IST)
t-max-icont-min-icon

அரசு திட்டத்தின் பெயரில், அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என ஐகோர்ட்டு தெரிவித்தது.

சென்னை,

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதலமைச்சரின் பெயர் இடம்பெற எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மக்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, "அரசு திட்டத்தின் பெயரில் அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. ஆளும் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்துவது சுப்ரீம் கோர்ட்டு மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது. அதனால் தமிழக அரசின் திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் முதல்வர் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது" என உத்தரவிட்டது.

அரசு நலத்திட்டம் தொடங்குவது குறித்தோ, அதனை செயல்படுத்துவது குறித்தோ எந்த உத்தரவையும் தெரிவிக்கவில்லை என தெரிவித்த சென்னை ஐகோர்ட்டு, 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் முதல்வர் பெயர் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி அதிமுக அளித்த புகாரை தேர்தல் ஆணையம் விசாரிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது எனவும் தெரிவித்தது.

1 More update

Next Story