டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

கொரோனா தடுப்பு பணி குறித்து திருவாரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தி வருகிறார்.
டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
Published on

திருவாரூர்,

கெரேனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்டங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தி வருகிறார். அதன்படி இன்று காலை திருவாரூர் மாவட்டத்திலும், பிற்பகல் தஞ்சை மாவட்டத்திலும் முதல்வர் ஆய்வு நடத்துகிறார்.

திருவாரூர் மாவட்டத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முடிவடைந்த பணிகளையும் தெடங்கி வைத்தார். பின்னர், 5 கோடி மதிப்பில் 781 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com