முதல்-அமைச்சர் வருகை: திருச்சியில் இன்று டிரோன்கள் பறக்க தடை

பாதுகாப்பு காரணம் கருதி டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
முதல்-அமைச்சர் வருகை: திருச்சியில் இன்று டிரோன்கள் பறக்க தடை
Published on

திருச்சி,

புதுக்கோட்டையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து இன்று மாலை விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். பின்னர் இங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டை செல்கிறார். பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் திருச்சி வந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார். இதையொட்டி பாதுகாப்பு காரணம் கருதி இன்று முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்துக்கு சென்று விட்டு மீண்டும் திருச்சிக்கு அவர் பயணம் செய்யும் சாலைகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com