

11 மாவட்ட கலெக்டர்கள்
தமிழகத்தில் சில மாவட்டங்களில் புயல் காரணமாக மழை பெய்து வருகிறது. இதுபோன்ற காலகட்டங்களில் மாவட்ட கலெக்டர்களை அரசு அழைத்து பேசி, ஆலோசனை வழங்குவது வழக்கமாக உள்ளது.அந்த வகையில் சென்னை, செங்கல்பட்டு, தேனி உள்ளிட்ட 11 மாவட்ட கலெக்டர்களுடன் சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தலைமைச்செயலாளர் இறையன்பு நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், போலீஸ் டி.ஜி.பி. ஜெ.கே.திரிபாதி உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
புயல், மழை வாய்ப்பு
மாவட்டம் வாரியாக மேற்கொள்ளப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு கால நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள், படுக்கை வசதிகள், ஆக்சிஜன் கையிருப்பு உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.புயல் வீசக்கூடிய மாவட்டங்களில் என்னென்ன முன்னெச்சரிகை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய எச்சரிக்கை என்ன? ஆகியவை பற்றியும் இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு அறிவுரை வழங்கினார்.