

சென்னை,
தமிழக தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். அவர், கடந்த ஜூன் மாத இறுதியில் ஓய்வு பெற்றார். எனவே, தமிழக அரசின் நிதித்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் கே. சண்முகம், புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இதனிடையே, லஞ்ச ஒழிப்பு ஆணையராக இருந்த மோகன் ஓய்வு பெற்ற நிலையில், சண்முகத்திற்கு லஞ்ச ஒழிப்பு ஆணையர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.