கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை
Published on

சென்னை,

கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனையடுத்து கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

மேலும் கொரோனா தடுப்பு சிறப்பு குழுவினரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். அத்துடன் ரயில்வே, விமான போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்கின்றனர். நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 5,679 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,69,370 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com