சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றத்திற்கு உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனை

சிறுமியின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றத்திற்கு உடந்தையாக இருந்த தாய்க்கு ஆயுள் தண்டனை
Published on

சென்னை,

14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றத்துக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு சிறுமியின் தந்தையை பிரிந்த தாய், டீ மாஸ்டர் ஒருவருடன் தகாத உறவில் இருந்த நிலையில், அந்த டீ மாஸ்டர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த விஷயம் சிறுமியின் தாய்க்கு தெரியவந்தபோதும், அவர் தனது கள்ளக்காதலன் மீது காவல்துறையில் புகார் அளிக்காமல், இதை வெளியில் சொல்லகூடாது என பெற்ற குழந்தையை தாயே மிரட்டியுள்ளார். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக சிறுமி அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து டீ மாஸ்டரையும், சிறுமியின் தாயையும் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தாய் மற்றும் டீ மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சிறுமியின் தாய் தாக்கல் செய்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, அந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, ஏற்கனவே வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com