பூச்சி கடித்து குழந்தை சாவு

பூச்சி கடித்து குழந்தை இறந்தது.
பூச்சி கடித்து குழந்தை சாவு
Published on

திருக்காட்டுப்பள்ளி:-

பூதலூர் அருகே உள்ள சித்திரகுடிமெயின்ரோடு பகுதியில் வசிப்பவர் ராதிகா (வயது30). இவர் தஞ்சையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய 2 வயது ஆண் குழந்தை சரவணன், சம்பவத்தன்று வீட்டின் முன்புறம் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பூச்சி ஒன்று குழந்தையை கடித்தது. இதில் மயங்கிய குழந்தையை உடனடியாக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பூதலூர் போலீஸ் நிலையத்தில் ராதிகா புகார் செய்தார். அதன்பேரில் பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜகஜீவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com