கோவையில் வாளி தண்ணீரில் தவறி விழுந்து குழந்தை பலி

கோவை ராம்நகரில் ஒரு வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு வயது குழந்தை சமையலறையில் இருந்த தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்து தலைகுப்புற கிடந்ததை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவையில் வாளி தண்ணீரில் தவறி விழுந்து குழந்தை பலி
Published on

பீகாரை சேர்ந்தவர் தினேஷ் (வயது 28). இவருடைய மனைவி குமாரி(25). இவர்கள் கோவை ராம்நகரில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார்கள். அவர்களுடன் ஒரு வயதான பெண் குழந்தை இருந்தது.

நேற்று முன்தினம் இரவு குழந்தை வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தது. அப்போது சமையலறையில் இருந்த தண்ணீர் வாளிக்குள் குழந்தை தவறி விழுந்து தலைகுப்புற கிடந்ததை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com