கடைகளில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

கடலூர், நெல்லிக்குப்பம் பகுதி கடைகளில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
கடைகளில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
Published on

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிகிறார்களா? என கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த் தலைமையில் தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் பழனிவேல், உதவி ஆய்வாளர் பிரபாகர், கடலூர் மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினர் இளங்கோவன், சைல்டு லைன் காளிதாஸ் ஆகியோர் நேற்று கடலூர் மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள கடைகள், ஜவுளிக்கடைகள், பாத்திரக் கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் குழந்தை தொழிலாளர்கள் யாரேனும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனரா? என்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கடைகளில் வேலை செய்பவர்களிடம் அவர்களது வயதையும், பிறந்த தேதியையும் கேட்டறிந்தனர். தொடர்ந்து கடை உரிமையாளர்களிடம் எனது கடை, நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்கள் எவரும் பணி புரியவில்லை என்றும், தாங்கள் ஒருபோதும் குழந்தை தொழிலாளர்களை வளர் இளம் பருவத்தில் பணிக்கு அமர்த்த மாட்டோம் என உறுதி கூறுகிறேன் என்பதை கையொப்பத்துடன் எழுதி வாங்கிக்கொண்டனர். மேலும் குழந்தை தொழிலாளர்கள் குறித்து கடைக்கு வந்திருந்த பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஆசிரியர் பயிற்றுநர்கள் லலிதாம்பாள், ஜெயசுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com