

சென்னை,
ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி (இன்று) பீஸ் பார் சில்ட்ரன் அறக்கட்டளையும், அதன் அனைத்து உறுப்பினர்களும், உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளின் சார்பாகவும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்கிறோம். மிகச்சிறப்பான இந்த பிறந்தநாளை மேலும் முக்கியமான ஒன்றாக்க இந்த நாளில் எங்களது கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணையும், குழந்தை பாதுகாப்புக்கான அறக்கட்டளை சார்பில் ஒரு செயலியையும் அறிமுகப்படுத்த உள்ளோம்.
அதனை லதா ரஜினிகாந்த் அறிமுகம் செய்கிறார். இதற்கு ஒப்புதல் கொடுத்த ரஜினிகாந்துக்கு மீண்டும் எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.