சிறுமி பலாத்காரம்; கட்டிட மேஸ்திரி மீது போக்சோவில் வழக்கு

சிறுமியை பலாத்காரம் செய்த கட்டிட மேஸ்திரி மீது போக்சோ சட்டம் பாய்ந்தது
சிறுமி பலாத்காரம்; கட்டிட மேஸ்திரி மீது போக்சோவில் வழக்கு
Published on

தர்மபுரி அருகே உள்ள பெரிய குரும்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் என்கிற முனியப்பன் (வயது 25). கட்டிட மேஸ்திரியான இவர் 15 வயது சிறுமியை கடந்த 2 ஆண்டுகளாக பின் தொடர்ந்து சென்று தன்னை காதலிக்ககோரி வற்புறுத்தி உள்ளார். இந்த நிலையில் அண்மையில் அந்த சிறுமியை ஆலங்கரை பகுதியில் உள்ள முள்ளுகாட்டிற்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி வீட்டிற்கு திரும்பிய பின்னர் இதுபற்றி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ பிரிவின் கீழ் முனியப்பன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com