குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்: விசாரணைக்கு வர பெற்றோருக்கு மருத்துவக்குழு அழைப்பு

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக குழந்தையின் பெற்றோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்: விசாரணைக்கு வர பெற்றோருக்கு மருத்துவக்குழு அழைப்பு
Published on

சென்னை,

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் தவறான சிகிச்சையே காரணம் என்று குழந்தையின் பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மருத்துவக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

3 துறை மருத்துவர்கள் அடங்கிய குழு இந்த விசாரணையை மேற்கொள்கிறது. இந்த விவகாரத்தில் குழந்தைக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 2 நாட்களில் இந்த குழு விசாரணை அறிக்கையை அரசுக்கு சமர்பிக்க உள்ளது.

இந்த நிலையில் குழந்தை கை அகற்றப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக குழந்தையின் பெற்றோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு குழந்தையின் பெற்றோர் உரிய ஆவணங்களுடன் விசாரணையில் கலந்து கொள்ள மருத்துவக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக குழந்தையின் பெற்றோரான தஸ்தகீர் - அஜிஸா தம்பதிக்கு விசாரணை அதிகாரி சம்மன் அனுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com