கோவிலில் மிளகாய் சண்டி யாகம்

கோவிலில் மிளகாய் சண்டி யாகம் நடந்தது.
கோவிலில் மிளகாய் சண்டி யாகம்
Published on

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு பிரத்தியங்கரா தேவிக்கு மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது. யாகத்தில் மூட்டை, மூட்டையாக மிளகாய் வத்தல் போடப்பட்டது. மலும் ஜாதிக்காய், கடுக்காய், கருமிளகு, ரோஜா இதழ், முக்கனிகள் உள்ளிட்ட பழங்கள், சேலைகள் போன்றவற்றை யாக குண்டத்தில் இட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com