ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷம்; சீருடையில் போலீஸ்காரர் கைது

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்..
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷம்; சீருடையில் போலீஸ்காரர் கைது
Published on

காரியாபட்டி, 

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்..

பெண்ணிடம் சில்மிஷம்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியை சேர்ந்த 33 வயது பெண் தனியார் பஸ்சில் வந்து கொண்டு இருந்தார்.

காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர் பெரியதம்பி சீருடையில் சித்திலக்குண்டு பஸ் நிறுத்தத்தில் இருந்து அந்த பஸ்சில் ஏறி உள்ளார். அவர், அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர், வேறு ஒரு பஸ் நிறுத்தத்தில் அந்த பெண் இறங்கி சென்றுள்ளார். பஸ்சில் நடந்தது குறித்து அந்த பெண் சிலரிடம் கூறியுள்ளார்.

இந்தநிலையில் அப்பகுதி மக்கள், மஞ்சம்பட்டி பஸ் நிறுத்த பகுதியில் போலீஸ்காரரை சிறைபிடித்து உடனடியாக திருச்சுழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், போலீசார் குறிப்பிட்ட நேரத்தில் வராததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கைது

பின்னர் திருச்சுழி போலீசார் வந்து, கிராமமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து போலீஸ்காரர் பெரியதம்பியை மீட்டு திருச்சுழி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

ஓடும் பஸ்சில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பெரியதம்பியை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com