சின்னக்குளம் ஊருணி தூர்வாரும் பணி

சின்னக்குளம் ஊருணி தூர்வாரும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சின்னக்குளம் ஊருணி தூர்வாரும் பணி
Published on

காரியாபட்டி, 

சின்னக்குளம் ஊருணி தூர்வாரும் பணிகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

சின்னக்குளம் ஊருணி

காரியாபட்டி தாலுகா மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள சின்னக்குளம் ஊருணியில் கழிவுநீர் தேங்கி அசுத்தமாக இருந்து வந்தது. ஆதலால் சின்னக்குளம் ஊருணியை சீரமைக்க வேண்டும் என மல்லாங்கிணறு பேரூராட்சி மக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கோரிக்கை வைத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவின் பேரில் சின்னக்குளம் ஊருணியை கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் 2022-2023-ம் ஆண்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்ய உத்தரவு இடப்பட்டது.

தூர்வாரும் பணி

இதையடுத்து தற்போது தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஊருணி தூர்வாரும் பணியை மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், மல்லாங்கிணறு பேரூராட்சி தலைவர் துளசிதாஸ், துணைத்தலைவர் மிக்கே லம்மாள், செயல் அலுவலர் அன்பழகன், இளநிலை பொறியாளர் கணேசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஊருணியை தூர்வார நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com