ஜெருசலேம் புனிதப் பயணம் சென்று திரும்பிய கிறிஸ்தவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

புனிதப் பயணம் சென்று திரும்பிய 550 கிறிஸ்தவர்களுக்கு தலா ரூ.37 ஆயிரமும், 50 கன்னியாஸ்திரிகளுக்கு தலா ரூ.60 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது.
ஜெருசலேம் புனிதப் பயணம் சென்று திரும்பிய கிறிஸ்தவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
ஜெருசலேம்
Published on: 

சென்னை,

ஜெருசலேம் புனிதப்பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறிஸ்தவர்கள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட கலெக்டர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்தெரிவித்திருப்பதாவது:-

ரூ.60 ஆயிரம் வரை மானியம்

தமிழக அரசால் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறிஸ்தவப் பயணிகளுக்கு மானியத் தொகை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, புனிதப் பயணம் சென்று திரும்பிய 550 கிறிஸ்தவர்களுக்கு தலா ரூ.37 ஆயிரமும், 50 கன்னியாஸ்திரிகளுக்கு தலா ரூ.60 ஆயிரமும் மானியமாக வழங்கப்படுகிறது.

விண்ணப்பிப்பது எப்படி?

நடப்பு ஆண்டில் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறிஸ்தவர்களிடம் இருந்து தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் இருந்து கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.

இணையதள முகவரி

மேலும், www.bcmbcmw.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதள முகவரியிலிருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

கடைசி நாள்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து, "ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமகால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600003" என்ற முகவரிக்கு வரும் 2027 ஜனவரி 31-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு சென்னை மாவட்ட கலெக்டர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.

X