தவெக சார்பில் இன்று கிறிஸ்துமஸ் விழா - விஜய் பங்கேற்பு

கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்று என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தவெக சார்பில் இன்று கிறிஸ்துமஸ் விழா - விஜய் பங்கேற்பு
Published on

செங்கல்பட்டு,

தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் தனித்தனியாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் த.வெ.க சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் இன்று காலை 10 மணிக்கு (திங்கட்கிழமை) கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசுகிறார். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள். இதில் கலந்துகொள்ள 1000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கிறிஸ்துமஸ் விழாவில் நலத்திட்ட உதவிகளை தவெக தலைவர் விஜய் வழங்க உள்ளார்.

இந்த விழாவில் கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்று தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com