தமிழ்நாடு முழுவதும் கரைபுரளும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


தமிழ்நாடு முழுவதும் கரைபுரளும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

சென்னை,

கிறிஸ்துமஸ் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ தேவாலயங்கள் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கின்றன. ஸ்டார்கள் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளன. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றதால் அதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. சென்னை பெசண்ட் நகர், சாந்தோம், மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கரைபுரண்டது. மக்கள் ஒருவொருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சென்னையில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரவு முழுக்க கூடுதல் ரோந்து பணிகளில் போலீசார் ஈடுபட உள்ளனர்.

1 More update

Next Story