கிறிஸ்துமஸ் பண்டிகை: பூக்களின் விலை உயர்வு - மதுரையில் மல்லிகைப்பூ கிலோ ரூ.3,000-க்கு விற்பனை

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
மதுரை,
உலகம் முழுவதும் நாளைய தினம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை கொண்டாட கிறிஸ்தவ மக்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர். பண்டிகை காலத்தையொட்டி புத்தாடைகள், இனிப்புகள், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை களைகட்டியுள்ளது.
இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.3,000-க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல் கனகாம்பரம் ஒரு கிலோ ரூ.1,500-க்கும், பிச்சி மற்றும் முல்லை ஆகிய பூக்கள் ஒரு கிலோ ரூ.1,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story






